கொழும்பு, சப்புகஸ்கந்த, மாபிம பகுதியில் பயணப்பொதியிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்குளி, சமித்புர பகுதியைச் சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், சடலத்தை கொண்டு செல்ல பயன்படுத்தியதாக கூறப்படும்; வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுடன், முச்சக்கரவண்டியில் பயணித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்த்துவ தெரிவித்துள்ளார்.






