இலங்கை நாடாளுமன்றத்தின் செங்கோலில், சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைகல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்ர்.
நடாளுமன்றத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அமைதியின்மைகளின் போது, இந்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என தான் நம்புவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தின் செங்கோலுக்கு சிறு சேதங்களே ஏற்பட்டுள்ளது. அதில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின், அதனை அதன் தாய் நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும்.
பிரித்தானியாவிலுள்ள நிறுவனம் ஒன்றே நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் செங்கோலை உருவாக்கியுள்ளது.
செங்கோலுக்கு ஏற்பட்ட சேதங்களை சரி செய்வதற்கான இயலுமை மற்றும் தொழில்நுட்ப வசதி உள்நாட்டில் கிடையாது.
இது பாரிய சேதம் கிடையாது எனவும், தற்போதைய சூழ்நிலையில் அதனை திருத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.





