நாட்டின் தற்போதைய அரசாங்கம் சரியில்லை என்றால், அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி விட்டு ஆட்சி அதிகாரத்தை யாரிடம் கையளிப்பது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அவ்வாறு புதிய அரசாங்கத்திடம் ஆட்சி அதிகாரத்தை கையளித்த பின்னர், மக்கள் வரிசைகளில் நிற்பது முற்றாக இல்லாமல் போய்விடுமா, டொலர் தட்டுப்பாடு நீங்கி விடுமா, எரிபொருள் விலைகள் குறைந்து விடுமா, எனவும் கேள்வி எழுப்பினார்.
அரசாங்கம் மாறி, ஆட்சியாளர் மாறினாலும், நாட்டில் நிலவும் நிலைமையில் மாற்றம் ஏற்பாடாது என்பதே உண்மை என அவர் தெரிவித்தார்.






