பயணப் பொதியில் பெண்ணின் சடலம்; கணவன், மனைவி கைது

பயணப் பொதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கணவன், மனைவி இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சபுகஸ்கந்த மாபிம எண்ணெய் சுத்திகரிப்ப வளாகத்திற்கு அருகில் வீதியில் குப்பைகள் கொட்டுமிடம் ஒன்றில் இருந்து குறித்த பெண்ணின் சடலம் நேற்று முன்தினம் (04) கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த சடலம் கை கால்கள் கட்டப்பட்டு பயணப்பொதியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண், மாளிகாவத்தை தொடர்மாடிக் குடியிருப்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்த 2 பிள்ளைகளின் தாயான, 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டிருந்தார்.

ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் அவரது கணவரும் இரண்டு பிள்ளைகளும் சடலத்தை நேற்று பார்வையிட்டதன் பின்னர் குறித்த பெண்ணின் சடலம் இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மட்டக்குளியைச் சேர்ந்த தம்பதியினரே (36 வயதான ஆண், பெண்) இவ்வாறு களனி வலய குற்ற விசாரணைப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply