அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்துக் கலைஞர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இக் கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெறுகின்றது.
இதன்போது, கலைஞர்களின் நிலைமை தொடர்பாகவும், கலைகளை எப்படி வளர்ப்பது என்பது தொடர்பாகவும் இராஜாங்க அமைச்சர் கலந்தாலோசித்துள்ளார்.
இச் சந்திப்பில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன், யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் மற்றும் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.







