வவுனியாவில் கௌரவிக்கப்பட்ட பத்து பல்துறை சேவையாளர்கள்!

தாயகத்தில் பல்வேறு வாழ்வாதாரம், கல்வி மற்றும் சமூகப்பணிகளை மேற்கொண்டு வரும் ‘தேவை கருதிய பொருளாதார மற்றும் சுற்றாடல்’ அமைப்பின் ஒருவருடப் பூர்த்தியை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சமூகப்பணிகளை மேற்கொண்டு வரும் பத்து பேர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில், இன்று காலை சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில், குறித்த நிறுவனத்தின் நிறுவுனரும் லண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலய பரிபாலன சபைத்தலைவருமான த.மன்மதராஜா தலைமையில் இடம்பெற்றது.

ஊடகத்துறைக்கான விருது மூத்த ஊடகவியலாளர் பொ.மணிக்கவாசகம், இலக்கியத்துறைக்கான விருது தமிழ் மணி அகளங்கன், ஆன்மீகம் சார்ந்த துறை விருது தமிழருவி சிவகுமார், பட்டதாரி ஆசிரியர் விருத்தி விருது ஆ.பொன்னையா, பயிலுநர் ஆசிரியர் விருத்தி விருது திருமதி நாகரத்தினம் தர்மதேவன், மருத்துவத்துறை விருது பத்மநாதன் சத்தியநாதன், சமூக சேவை விருது செ.சந்திரகுமார், கல்வித்துறை விருது இறக்கை கல்வி சார் தன்னார்வ அமைப்பு, பசுமை விவசாயி விருது பா.நேசராசா, சுற்றாடல் நேயம் விருது சொ.கமலாம்பிகை ஆகியோருக்கு அமைப்பின் செயலாளர் க.சுவர்ணராஜா கௌரவிப்புக்களை வழங்கிவைத்தர் .

நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply