மருதங்கேணியில் விவசாய நிலங்களுக்கு செல்ல தடை: உரிமையாளர்கள் சுமந்திரனிடம் முறையீடு!

மருதங்கேணி பகுதியில் நித்தியவெட்டை, கேவில் பகுதிகளில் உள்ள தமது விவசாய நிலங்களுக்கு செல்லவிடாது வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தடைபோடுவதாக அந்த நிலத்தின் உரிமையாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப் பகுதியை இன்று நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.

இதன்போது, இந்த நிலத்தின் உரிமையை தக்க வைக்க அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்ததோடு, அதுதொடர்பில் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எடுத்துரைத்தார்.

இதில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் நில உரிமையாளர்கள் அப்பகுதிக்கு நேரடியாக சென்று நிலமைகளை ஆராய்ந்தனர்.

Leave a Reply