சமுர்த்தி பயனாளிகளை பலப்படுத்தும் வேலைத்திட்டம் மன்னாரில் ஆரம்பம்!

மன்னார் மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இரண்டு இலட்சம் சமுர்த்தி பயனாளிகள் பலப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரச அதிபர் ஏ. ஸ்டான்லி டிமெல், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்மொழியப்பட்ட திட்டங்களுக்காக மீன்பிடி அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு 26 பயனாளிகளுக்கான காசோலைகள் அமைச்சரால் வழங்கப்பட்டது.

பாசி வளர்ப்பு, மீன் வளர்ப்பு உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 443 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று முதற்கட்டமாக 26 பயணாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும், இயற்கை மரணமடைந்த மன்னார் மாவட்டத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்களான ஏ.ஜே.எம். நிஜாம் மற்றும் கே. திருச்செல்வம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா 250,000 ரூபாய் பெறுமதியான காசோலைகள் அமைச்சரால் வழங்கப்பட்டது.

Leave a Reply