
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடான சியாரா லியோன் தலைநகர் ஃப்ரீ டவுன் சாலை சந்திப்பு ஒன்றில் ஏற்பட்ட வாகன விபத்தில் 90 பேர் உடல் கருகி இறந்தனர்.
சோய்த்ராம் சூப்பர் மார்க்கெட் அருகில் உள்ள சாலை சந்திப்பில் இந்த விபத்து நடந்தது. பெட்ரோல் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று சாலை சந்திப்பில் வந்து திரும்பிக்கொண்டிருந்தது.
எதிரில் வந்து கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்றுடன் மோதியது.
இந்த மோதலில் பெற்றோர் தங்கள் மேற்பகுதி உடைந்து சிதறியது சிதறிய பெற்றோர் எங்கு விழுந்ததோ அங்கெல்லாம் தீப்பற்றி எரிய தொடங்கியது.
பெட்ரோல் சிதறி தீப்பிடித்த காரணத்தினால் பயணிகள் பேருந்து முழுக்க வெந்து சாம்பலாகியது .பயணிகள் பேருந்தில் இருந்த அனைவரும் இறந்தனர்.
இந்த இந்த வாகன விபத்து தீ பரவிய காரணத்தினால் கடுமையான தீவிரமாக மாறியது. பெட்ரோல் பரவி எரியும் பொழுது அழைக்க முடியாமல் மக்கள் தொலைவில் இருந்து வேடிக்கை பார்த்தனர்.
அப்பகுதி முழுக்க புகை மண்டலம் பரவியது. பெட்ரோல் எரிந்து முடிந்ததும் அங்கு கருகி கிடந்த உடல்களை சாலை ஓரத்தில் அடுக்கினார்கள். சாலையோரம் இருந்த கடைகளும் தீப்பற்றி எரிந்து சாம்பலாகின.
இந்த விபத்து பெரிதும் அதிர்ச்சியளிக்கிறது என்று சியாரா லியோன் ஜனாதிபதி ஜூலியஸ் மாடா நியோ தெரிவித்தார்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.





