சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களைப் பின்பற்றி மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிகால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், கொரோனாத் தடுப்பு தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக நேற்று நாடு முழுவதும், 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், இதுவரை 81,809 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை குறைத்துவருது கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் அசமந்தப் போக்கும் காணப்படுகின்றது.
இது தொடர்பில் பொலிஸார் அவதானித்து வருகின்றனர். எனவே, சோதனைகளை அதிகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார திணைக்களப் பணிப்பாளர் சுகாதார வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.
எனவே, கொரோனாத் தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நாடு வழமைக்குத் திரும்பவும், மக்கள் சுதந்திரமாக நடமாடவும், மக்கள் வழிகாட்டல்களை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.






