டிசம்பர் மாதம் கடும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும்! சன்ன ஜயசுமன

சுகாதார அமைச்சு வழங்கியுள்ள சுகாதார வழிக்காட்டல்களை கடுமையாக பின்பற்றாது போனால், எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் கடும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்ற வேண்டியது மிக முக்கியமானது.

முகக்கவசங்களை அணியுங்கள், ஒருவருக்கு ஒருவர் இடைவெளியை கடைப்பிடியுங்கள், கவனமாக இருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரப் போகும் நிலைமையானது நன்மையாக இருக்காது என்பதே ஆய்வு புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

Leave a Reply