வடக்கில் மீண்டும் இனவாதத்தை தூண்ட முயற்சி! அமைச்சர் விதுர

காரைநகரில் அமைச்சரை நேற்று விரட்டியடித்த மக்கள் என பத்திரிகை ஒன்றில் செய்தி பிரசுரிக்கப்பட்டு இருக்கின்றது என தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

மேலும், நான் நேற்று காரைநகருக்கு விஜயம் செய்யபோது அங்கே கூறியிருக்கின்றார்கள் அமைச்சர் ஒருவர் வருகிறார், இங்கே விகாரை கட்டுவதற்காக என, ஏன் இவ்வாறு பொய் கூறுகின்றார்கள்.

மீண்டும் வடக்கில் இனவாதம் மதவாதத்தை தூண்டி மக்களை குழப்ப நினைக்கிறார்கள், ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என தெரியவில்லை.

இச் சம்பவத்திற்கு பின்னால் ஒரு அரசியல் உள்ளது என்பதை நான் உணருகின்றேன். மக்களுக்காக அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் ஏன் இவ்வாறான மக்களை போலியாக தூண்டி விடுகிறார்கள் என்பது தெரியவில்லை என அவர் தெரிவித்தார்.

Leave a Reply