நாட்டில் தற்போதைய கொரோனா நிலவரம்?

நாட்டில் மேலும் 482 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.

இதற்கமைய, இதுவரையான கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,841 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 6 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 14 பேரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் 03 ஆணும் 03 பெண்களும் அடங்குவதாகவும், 60 வயதுக்கு மேற்பட்மோரில் 07 ஆண்களும் 07 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply