ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக மீண்டும் எழுவதற்கு தயார்! தமிதா அபேரத்ன

காலி முகத்திடல் போராட்டகளத்தில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக நடிகையும் கோட்டகோகம செயற்பாட்டாளருமான தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், போராட்டம் இன்னும் முடியவில்லை என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

‘நாங்கள் காலி முகத்திடலில் இருந்து உடல் ரீதியாக வெளியேறினாலும், போராட்டம் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு ஊழல் அரசியல்வாதிகளுக்கும் எதிராக மீண்டும் எழுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்’ என்று அவர் கூறினார்.

காலி முகத்திடலில் போராட்டம் நடத்தப்பட்டு இன்றுடன் 123 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த இடத்தில் இருந்த கூடாரங்களை அகற்றும் நடவடிக்கைகளில் போராட்டத்தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply