திருகோணமலை மாவட்டத்தில், ஊடக இல்லமொன்று உத்தியோகபூர்வமாக இன்று (06) திறந்து வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெறுள்ளது.
இந் நிகழ்வு, ஊடக சங்கத்தின் தலைவர் மங்களநாத் லியனாராச்சி தலைமையில் இடம் பெற்றுள்ளது.
பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரச அதிபர் சமன் தர்சன பாண்டி கோராள கலந்து கொண்டு குறித்த ஊடக இல்லத்தை திறந்து வைத்துள்ளார்.
இவ் நிகழ்வில் முன்னால் மொறவெவ பிரதேச சபை தவிசாளர் உபரத்ன கிமி தேரர், கலந்து கொண்டதுடன், சமய அனுஷ்டானங்களுடன் ஊடகவியலாளர்களுக்கான மேலங்கிகளும் (Tshirt) வழங்கி வைக்கப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்தில் குறித்த இச் சங்கத்தில் மூவினத்தை சேர்ந்தவர்களும் அங்கம் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






