வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ‘துன்பியல் சம்பவம்’ பிரபாகரன் தன்னிடம் நேரில் தெரிவித்ததாக ஹக்கீம் தெரிவிப்பு

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை ஒரு துன்பியல் சம்பவம் என விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னிடம் கூறியதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

யாழ்பாணம் சோனகத் தெரு, முஹம் மதியா ஜூம்ஆ பள்ளிவாசலில் இடம் பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி சந்தித்தேன்.

நோர்வே ஏற்பாட்டாளர்கள் மூலமாக எதிர்பாராதவிதத்தில் எங்களுக்கு அவரை சந்திப்பதற்காக அறிவிப்பு வந்திருந்தது.

ஏறத்தாழ 3 மணித்தியாலங்களுக்கு மேலாக நாங்கள் வேலுப்பிள்ளை பிரபாகரனோடு நேருக்கு நேர் அமர்ந்து தமிழ், முஸ்லிம் விவகாரம் தொடர்பில் கதைத்திருந்தோம். அப்போது எங்களுடன் அன்ரன் பாலசிங்கமும் கலந்துகொண்டிருந்தார்.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை பிரபாகரன் ஒரு’துன்பியல் சம்பவம்’ எனக் கூறியிருந்தார்.

அதை நாங்கள் பேசுமளவுக்கு அவர் வைக்கவில்லை. அந்த அளவிற்கு அவர் உணர்வுபூர்வமாக அதனைக் கூறினார்.

அந்தப் பேச்சுவார்த்தையின்போது உத்தியோகபூர்வமாக அரசாங்கத்தின் தூதுக்குழுவில் 6 தடவைகள் வெளிநாடுகளில் இடம்பெற்ற சந்திப்புகளில் நானும் கலந்துகொண்டவன் என்ற அடிப்படையில் விடுதலைப் புலிகள் நடந்த விடயத்தை பற்றி பேசுவதற்கே அவர்களுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.

அதனை எவ்வாறாவது மீள சரி செய்து விட வேண்டும் என்பதற்காக என்ன செய்ய வேண்டுமென்பதில் அவர்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர்களிடம் பல விடயங்களை பேசினோம் என்றார்.

வரலாறு தெரிந்தவர்கள் கூட அதனைத் தெளிவாக கூற முன்வருகின்றார்கள் இல்லை. ஆரியகுளமானது ஆரியச்சக்கரவர்த்தி மன்னனால் கட்டப்பட்ட குளம் ஆகும்.நவலர் பிறந்த வளவு பற்றி ஏற்கனவே இருந்த முதல்வர்கள், ஆணையாளர்களுடன் நான் பேசியிருக்கின்றேன்.

கிழக்கிலங்கையில் விபுலானந்தர் பிறந்த இடத்தினை எவ்வளவு அழகாக வரலாற்று இடமாக வைத்துப் பாதுகாக்கிறார்கள்.

ஆனால், இங்கே நாவலர் பிறந்த இடத்தை நாங்கள் சரியாகப் பேணவில்லை. நாய்க்கு ஊசி போடவும், தடுப்பூசி போடுவதற்குமே இந்த இடம் பயன்படுத்தப்படுகின்றது.

இந்த மண்டபத்தில் ஒரு நாவலரின் படம் கூட இல்லை. இங்கே என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை.நாவலர் மண்டபத்தில் ஒளிவிழா வைக்கின்றார்கள். எங்கேயாவது ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் சரஸ்வதி பூசையினைவைக்க அனுமதிப்பார்களா?

எனவே, இந்தப் புனித பிரதேசத்தினை உங்களால் சைவப் பாரம்பரிய முறைப்படி பேணிப் பாதுகாக்க முடியாவிடில் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்திடம் அல்லது இந்து மாமன்றத்திடம் கையளியுங்கள் எனவும் அவர் மேலும் வேண்டு கோள் விடுத்தார்.

Leave a Reply