முல்லைத்தீவு மீனவர்களை சந்தித்து பேசினார் சுமந்திரன்!

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் முல்லைத்தீவு கள்ள பாட்டு பகுதியில் இடம்பெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சுஜீவன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மீனவர்களின் தாம் அன்றாடம் எதிர்நோக்குகின்ற மீன்பிடி நடவடிக்கை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது கருத்த வெளியிட்ட சுமந்திரன், போராட்டங்களின் மூலமாகவே பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் அனைத்தையும் சட்டரீதியாக தீர்த்துக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply