நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து, கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 1500 பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளார்.
சப்புகஸ்கந்த பிரதேசத்தில் பயணப்பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் குறித்த விசாரணைகளில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, காணாமல் போன பெண்களில் திருமணமானவர்களும் அடங்குவதுடன், சில பெண்கள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு சென்றுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவ்வாறு காணாமல் போன பெண்கள் தொடர்பில், விாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.






