வலி. மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட அராலி கிழக்கு கலைமகள் சனசமூக நிலையம் இன்று காலை 10 மணியளவில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனால் திறந்து வைக்கப்பட்டது.
காலை பத்து மணியளவில் அராலி கிழக்கு சனசமூக நிலைய தலைவர் மல்லிகானந்த பரமகுலசிங்கம் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் அராலி கிழக்கு வாலயம்மன் ஆலய வழிபாட்டுடன் விருந்தினர்கள் பான்ட் வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டு பின்னர் மங்கல விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது.
பின்னர் சனசமூக நிலையத்தை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் நாடா வெட்டி திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து சனசமூக நிலைய ஸ்தாபகர் Dr.தவரத்தினசிங்கதினுடைய நினைவுருவபடமும் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வலி. மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன், வலி. தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன், வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான உமாபதி, ஜெயந்தன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் அ.சிவானந்தன், அராலி கிழக்கு அ.மி.த.க பாடசாலை அதிபர், வலி. மேற்கு சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ் சனசமூக நிலையத்திற்கு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரால் புனரமைப்பிற்காக நிதியொதுக்கீடு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





பிற செய்திகள்
- மின் கட்டண அதிகரிப்பை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது! மின்சார சபை
- இலங்கையில் கர்ப்பிணி பெண்களின் உயிருக்கு ஆபத்து! ஐ.நா. விடுத்துள்ள எச்சரிக்கை
- எரிபொருள் பிரச்சினை தொடர்பில் மறைக்கப்படும் உண்மைகள்!
- இலங்கை விளம்பரத்தை தடை செய்த சீன சமுக ஊடகங்கள்! – கப்பல் விவகாரத்திற்கு பதிலடி
- இலங்கை எரிபொருள் சந்தையில் நுழையும் சீன நிறுவனம்? அமைச்சர் வெளியிட்ட தகவல்
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka





