முட்டை விலை உயர்வு- 130 ரூபாவிற்கு விற்கப்படும் அப்பம்!

இலங்கையில் பலராலும் விரும்பி உண்ணப்படும் முட்டை அப்பத்தின் விலை மிக அதிக அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பல பகுதிகளில் 50 முதல் 60 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை அப்பம் தற்போது சாதாரண உணவகங்களில் 120 முதல் 130 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையில், முட்டை விலை 60 முதல் 65 ரூபாய் வரை உயர்ந்துள்ளமையே இதற்கு பிரதான காரணம் என உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் எரிவாயுவின் விலை உயர்ந்துள்ளதாலும், முட்டை அப்பம் விலையை உயர்ந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

பிற செய்திகள்

Leave a Reply