மல்யுத்தப் போட்டியில் பதக்கம் வென்ற நெத்மியை சந்தித்த நாமல்!

இங்கிலாந்தில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் முதன்முறையாக மல்யுத்தப் போட்டியில் இலங்கைக்காக பதக்கம் வென்ற நெத்மி அஹின்சா, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

இது தொடர்பான படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்,

“பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் நாட்டிற்கு முதல் மல்யுத்தப் பதக்கம் வென்ற நேத்மி அஹிம்சாவின் அற்புதமான சாதனை உண்மையில் நாட்டுக்கு ஒரு பெரிய கௌரவம்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் சரியான மனப்பான்மை மற்றும் உறுதிப்பாடு மூலம் வெற்றிகளைப் பெற முடியும் என்பதற்கு அவர் நாட்டிற்கு முன்னுதாரணமாக விளங்கினார்.- எனத் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply