ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு, பூரண ஆதரவு.வழங்குவதாக வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது
இதுதொடர்பில் வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தேசிய மடத்தில் தொழிற்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் மற்றும் பணியமர்த்தப்பட்ட பட்டதாரிகள் சங்கம் என்பவற்றால் எதிர்வரும் 08:11.2021ம் திகதி திங்கடகிழமை முன்னெடுக்கப்படவிருக்கும் ஒரு நாள் சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கமாகிய நாமும் எமது ஆதரவினை தெரிவிக்கின்றோம்.
நியாயமான முறையில் எமது உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற | தீர்த்து வைக்கப்பட வேண்டிய சம்பள முரண்பாடுகள்,பதவி உயர்வுகள்,திறமை அடிப்படையிலான கடமைகள்,பயணப்படி போன்ற விடயங்களை முன் நிறுத்தி மேற்கொள்ளப்படும்.
குறித்த சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு வடமாகாணத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகிய நாமும் எமது பூரண ஆதரவினை தெரிவித்து வரும் திங்கட்கிழமை சுகயினத்தை அறிவித்து விடுமுறையை பெற்று ஒத்துழைப்பு நல்குவோம்.
குறித்த தினத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நம் திணைக்கள தலைவர்களுக்கு முறையாக (குறுஞ்செய்தி, தந்தி, கடிதம், மற்றும் மின்னஞ்சல் போன்றவற்றின் மூலமாக) நம் விடுமுறையை அறிவித்து விடுமுறையை பெற்று ஒத்துழைப்போம்.
அதன் மூலம் நாம் நமது உரிமைகளை வென்றெடுப்போம். என தெரிவித்துள்ளனர்.







