லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான புதிய திகதிகள் அறிவிப்பு

கொழும்பு,ஓக 10

மூன்றாவது லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.

முன்னதாக லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை ஜீலை 31  முதல் ஒகஸ்ட் 20 வரை நடாத்த திட்டமிட்டுந்த நிலையில், நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இவ்வாறு தொடர் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply