ரஸ்யா தொடர்ந்தும் யுக்ரேன் மீது ஏவுகணை தாக்குதல்: 21 பேர் உயிரிழப்பு

ரஷ்யா,ஓக 10

Zaporizhzhia அனு ஆலையின் முழு கட்டுப்பாட்டையும் யுக்கேனிடம் வழங்குமாறு G7 வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த ஆலையில் தொழில் புரியும் யுக்ரேனியர்களின் சுயாதீனத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ரஸ்யாவின் அழுத்தமானது மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் எனவும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ரஸ்யா தொடர்ந்தும் யுக்ரேன் மீது ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

யுக்ரேனின்  Dnipropetrovsk  நகரின் மீது மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, Nikopol நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 11 பேரும், Marganets நகரில் இடம்பெற்ற தாக்குதலில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply