மடுத்திருப்பதியின் தூய்மைக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்- மன்னார் ஆயர் கோரிக்கை!

மடு திருத்தலத்துக்கு வருவோர் பய பக்தியுடன் வழிபாடுகளில் கலந்து கொண்டு ஆலயத்தின் புனிதத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் . மடுத்திருப்பதியின் தூய்மைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் எவரும் செயற்படக்கூடாது என்று மன் னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார் .

மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் , மாவட்டச் செயலர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் மடுத் திருத்தலத்தின் ஆவணி மாத பெருவிழாவுக்கான கூட்டம் மடுத்திருத்தலத்தில் நேற்றுமுன் தினம் நடைபெற்றது . இதன்போதே ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

பெருவிழாவை முன்னிட்டு தற்போது 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர் கள் மடுவுக்கு வந்துள்ளனர் . இங்கு அமைக்கப்பட்டிருக்கும் வீடுகள் யாவும் பக்தர்கள் தங்குவதற்காக தன்னகப்படுத்தப்பட்டுள்ளன .

பல நூற்றுக்கணக்கான கூடாரங்கள் அமைத்து பலர் இங்கு தங்கியுள்ளனர் . இவற்றுடன் மேலும் பெருந்தொகையான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது .

இவ்வாறான ஓர் இடத்தில் மக்கள் ஒன்றுகூடும்போது நாங்கள் அவர்களின் ஆரோக்கியத்தையும் அவசியம் கவனத்தில் எடுக்க வேண்டி யுள்ளது அத்துடன் நாட்டில் கொரோனாத் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பெருவிழாவில் முகக்கவசம் அவசியம் அணிய வேண்டும் என்று மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார் .

அதற்கமைய முகக்கவசம் அணிவதன் மூலம் எம்மையும் மற்றவர்களையும் பாதுகாக்க முடியும் – என்றார்

பிற செய்திகள்

Leave a Reply