ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் துறைக்கு மாற்ற முயற்சியா?

ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் துறைக்கு மாற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகஇ சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்போது ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது.

அவற்றில் தரைவழிச் செயல்பாடுகள் மற்றும் சரக்குப் பிரிவு ஆண்டுக்கு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுகிறது.

ஒரு விமானத்திற்கு மாதத்திற்கு சுமார் 5-8 லட்சம் அமெரிக்க டொலர்கள் குத்தகை செலுத்த வேண்டும் என்பதுடன்இ மொத்த செலவில் 25 வீதம் எரிபொருளுக்காகச் செலுத்த வேண்டியுள்ளது.

விமானக் குத்தகைக் கொடுப்பனவுகள்இ எரிபொருள் செலவுகள் மற்றும் இதர செலவுகள் அதிகரிப்பதால் சேவை நஷ்டமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில்இ ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நஷ்டம் நாட்டுக்கு பாரிய சுமையாக மாறியுள்ள நிலையில்இ குறிப்பிட்ட பங்குகளை தக்கவைத்து எஞ்சிய பங்குகளை தனியாருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக எதிர்வரும் 9ம் திகதிக்குள் முடிவு எடுக்கப்பட உள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply