சிந்திக்காவிட்டால் சீனாவுடனான உறவு துண்டிக்கப்படும்: மைத்திரி

கொழும்பு,ஓக 11

அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தில் சிந்தித்து செயற்படாவிட்டால் சீனாவுடனான உறவையும் நாடு இழக்க நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடக மத்திய நிலையத்தைத் திறந்து வைத்து கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிலையில் நாட்டுக்கு வருகை தரவுள்ள சீன கப்பல் தொடர்பில் இலங்கைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் அரசாங்கம் தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply