தோனி தவறவிட்ட பிடிகள்: ரஷித் லத்தீப்பின் விமர்சனம்

இந்தியா,ஓக 11

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேந்திரசிங் தோனியின் திறமை தொடர்பில், பாகிஸ்தானிய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் ரஷித் லத்தீப் விமர்சித்துள்ளார்.

எம் எஸ் டோனி சிறந்த விக்கெட் விக்கட் காப்பாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் 256 பிடிகளையும் 38 ஸ்டெம்பிங் ஆட்டமிழத்தலையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 123 ஸ்டெம்பிங் ஆட்டமிழந்தலையும், 321 பிடிகளையும் எடுத்துள்ளார்.

இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் 57 பிடிகள், 34 ஸ்டெம்பிங் ஆட்டமிழத்தல்களை செய்திருக்கிறார்.

இந்தநிலையில் அவரின் விக்கெட் காப்பு ஆட்டம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் விமர்சித்துள்ளார்.

தோனி விளையாடிய காலங்களில் 21 சதவீத பிடிகளை தவறவிட்டுள்ளார்.

இது பெரிய எண்ணிக்கையாகும்.

அனைவரும் பிடிகளை எடுத்த பட்டியலை பார்க்கிறார்கள்.

ஆனால் கைவிடப்பட்ட பிடிகளின் எண்ணிக்கை, தவறவிட்ட ஸ்டெம்பிங்கின் எண்ணிக்கை, தவறவிட்ட ரன் அவுட்களை யாரும் கவனிப்பதில்லை என்று பாகிஸ்தானிய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *