மக்கள் கையில் பணம் இல்லாததற்கு தன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கு மாத்திரமன்றி, உலகம் முழுவதிலும் இந்த பொதுவான நிலை ஏற்பட்டுள்ளது என்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு போதுமான பணம் மக்களிடம் இல்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள் என்ற ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது ,
அதனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.உலகின் மொத்த உற்பத்தி செயல்முறையும் நின்று விட்டதால் தான் நாமும் எமது நாட்டினை மூடினோம்.இதனால் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது என்பது தெரியும்.இருந்தாலும் இத்தகைய நிலைமைக்கு எம்மால் எதுவும் செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.






