கொழும்பு – அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று (6) இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைவாக கொழும்பு, பேலியாகொட பியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேதியாகொட பிரதேசத்தில், பியகம நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, பாதசாரி ஒருவர் மீது மோதியதில் பாதசாரி மரணமடைந்தார்.
பம்பலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 44 வயது நபரே மரணமடைந்தார்.
விபத்தில் காயமடைந்த பாதசாரியை கிரிபத்கொட வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் பாதாசாரி மரணமடைந்தார்.
விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் செலுத்துநரை கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, அனுராதபுரம் கவரக்குளம் வீதியில், லொறியொன்றும் சிறிய ரக லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், சிறிய ரக லொறியின் சாரதி மரணமடைந்தார்.
அனுராதபுரம் மஹபலாடிகுளம் பிரதேசத்தை சேர்ந்த 29 வயது நபரே மரணமடைந்தார்.
விபத்தில் காயமடைந்த குறித்த நபரை அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






