தலையில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

jmm

குருநாகலில், தலையில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குருநாகல் – ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோன்வௌ பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மடங்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வீட்டில் தனிமையில் வசித்து வந்தவர் என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சடலம், பிரேத பரிசோதனைக்காக குளியாப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை ஹெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply