நீதி அமைச்சர் அலிசப்ரியின் பதவி விலகை ஏற்க மறுப்பு!

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பதவிக்கு ஞானசார தேரரை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதியமைச்சர் அலி சப்ரி இரண்டு பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதியிடம் நேற்றுமுன்தினம் கையளித்துள்ளார்.

எவ்வாறாயினும், அலி சப்ரியின் பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சுப் பதவிகளிலிருந்தே விலகுவதாக அலி சப்ரி கடிதங்களை கையளித்துள்ளார்.

Leave a Reply