நீரில் மூழ்கி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!

பாடசாலைக்கு சிரமதானம் செய்யப்போவதாக கூறிவிட்டுச் சென்ற மாணவன், நண்பர்களுடன் கிணற்றில் நீந்திய போது அதில் மூழ்கியுள்ளார். நண்பர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்களால் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

மூளாயைச் சேர்ந்த பிரபாகரன் ரஜீவன் (வயது – 18) என்ற மாணவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சுழிபுரம் திக்கரைப் பகுதியிலுள்ள கிணற்றிலேயே நண்பர்களுடன் இணைந்து மேற்படி மாணவன் நேற்று பி.ப. 3 மணியளவில் நீந்தியுள்ளார். திடீரென அவர் மூழ்கத் தொடங்கியதும், நண்பர்கள் அயலில் உள்ளவர்களை அழைத்துள்ளனர். அவர்கள் மாணவனை மீட்டு மூளாய் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply