ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டமொன்று நேற்று சனிக்கிழமை இடம்பெறுள்ளது.
ஸ்கொட்லாந்தில் நடைபெறும் காலநிலைமாற்ற மாநாட்டில் கலந்துகொள்ள கோட்டாபய ராஜபக்ச சென்றிருந்தமைக்கும், குறித்த மாநாட்டில் காலநிலை மாற்றம் புவி பாதுகாப்பு குறித்து கோட்டாபய உரையாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டம், புலம் பெயர் மக்களால் இலண்டன் மாநகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






