விபத்தில் முதியவர் சாவு!

வீதியை கடக்க முற்பட்ட முதியவரை மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில்; நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.

மட்டுவில் வடக்கு சந்திரபுரத்தைச் சேர்ந்த க.லோகநாதன் (வயது – 65) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு, சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள வீதியில், வர்த்தக நிலையத்துக்குச் சென்றுவிட்டு வீதியைக் கடக்க முற்பட்டபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முதியவரை மோதியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த முதியவர் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதியான இளைஞன் இருவரும் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட முதியவர் அங்கு உயிரிழந்துள்ளார்

Leave a Reply