இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கலாபூஷண விருதிற்கு தெரிவான தமிழன்

இவ்வருடம் தேசிய பட்டியல் மூலம் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

யாழ்ப்பாண மாவட்டத்தின் உடுவில் பிரதேச செயலகத்தினை சேர்ந்து 79 வயதுடைய செல்லத்தம்பி பரமநாதன் என்பவரே, கலாபூஷண விருது – 2020 க்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தெரியவருகையில்,

கடந்த 19 வருடங்களாக கலாபூஷண விருதுக்காக செல்லத்தம்பி பரமநாதன் விண்ணப்பித்து வந்துள்ளார்

2006 -2015 ஆண்டு காலப்பகுதியில் 10 ஆண்டுகளாக, மாவட்ட செயலகத்திற்கு இவருடைய விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எனினும், இவர் அதிஉச்ச புள்ளிகளைப் பெற்ற போதும் இவருக்கு விருது வழங்கப்பட வில்லை

கடந்த சில வருடமாக இவருடைய விண்ணப்பம் குறித்த் திணைக்களத்துக்கு விருதுக்காக அனுப்பி வைக்கப்படவில்லை

மேலும் கடந்த 2020 ஆண்டும் கூட இவருடைய விண்ணப்பம் பிரதேச செயலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் குறித்த திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை

இதேவேளை, தனிப்பட்ட முயற்சினால் குறித்த கலைஞர் தேசிய பட்டியல் மூலம் விருதினை பெற்றுக் கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Leave a Reply