கொக்குவில் – கேணியடிப் பகுதியில் நேற்று இரவு நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 8 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் குறித்த பகுதியினைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே காயமடைந்துள்ளார்.
குறித்த இளைஞர் மீது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேராலேயே வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.
கை, கால் பகுதிகளில் காயமடைந்த குறித்த இளைஞர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






