கொரோனா வைரசு தொற்றின் காரணமாக மூடப்பட்டுள்ள , சகல பாடசாலைகளும் ,இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை திறக்கப்படவுள்ளது.
இதற்கு அமைவாக தரம் 10,11,12 மற்றும் 13 தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பேரேரா தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளுக்கு அமைவாக மாணவர்களை, பாடசாலைகளுக்கு அனுபுவது பெற்றோரின் பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆரம்ப பிரிவுகளைக் கொண்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சுகாதார அமைச்சின் சிபார்சு கிடைத்தவுடன், தரம் ஒன்றில் இருந்து 9 வரையான வகுப்புக்ககளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைஎடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.






