ஒரே நாடு ஒரே சட்டம்; ஞானசாரரை ஏன் நியமித்தேன்?

ஒரே நாடு, ஒரே சட்டம் எனும் வேலைத்திட்டம் பற்றி ஞானசார தேரர்தான் கடந்த ஐந்தாண்டுகளாக கதைத்துவந்தார். அதனால்தான் அது தொடர்பில் வேலைத்திட்டத்தை உருவாக்கித் தருமாறு அவர் தலைமையில் செயலணியை நியமித்துள்ளேன். இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு, ஒரே சட்டம் எனும் வேலைத்திட்டம் பற்றி ஞானசார தேரர்தான் கடந்த ஐந்தாண்டுகளாக கதைத்துவந்தார். இது தொடர்பில் அவருடன் கலந்துரையாடினேன், ஒரே நாடு, ஒரே சட்டம் தொடர்பில் ஐந்தாண்டுகள் கதைக்கின்றீர்கள். அதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்கி தருமாறு கோரினேன். அவ்வாறு வழங்கப்படும் திட்டம் நீதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்படும். குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். எனினும், இந்த நியமனத்தையும் சிலர் விமர்சிக்கின்றனர்’ என்று கோத்தாபய மேலும் தெரிவித்துள்ளார். (ஒ,44)

Leave a Reply