மின் கட்டண உயர்வால் மக்கள் கடும் அவதி; நிவாரணம் வழங்குமாறு எதிர்க்கட்சி கோரிக்கை!

75% மின்சாரக் கட்டண உயர்வால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஆகவே மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவதற்கு கவனம் செலுத்துமாறு சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்குபோதே இந்த கோரிக்கையை விடுத்தார்.

இதேவேளை எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்லவும் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார்.

பிற செய்திகள்

Leave a Reply