திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் ரயில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்தார்.
இச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
முள்ளிப்பொத்தானையைச் சேர்ந்த 21 வயதுடைய ஹமீட் முபீட் எனும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தார்.
புகையிரத வீதியில் நின்று கொண்டு தொலைபேசியில் பேசியதன் காரணமாக ரயிலில் மோதுண்து இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரனையில் தெரியவருகிறது.
சடலம் கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






