முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதையல் தோண்ட வந்த மூவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வைத்து நேற்று இரவு இவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு, அனுராதபுரம், பொலனறுவை பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடியவேளை, இவர்களை கைது செய்து விசாரித்தபோது, புதையல் தோண்ட வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் இவர்களை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.






