சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்திய நபர் கைது!

சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்திய நபர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

காலி பிரதேசத்தில் உள்ள பிரபல ஆலயமொன்றை நடத்தும் போதகர் போன்று வேடமணிந்து குறித்த சந்தேக நபர் வாட்ஸ் அப் ஊடாக சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் கடந்த 10ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அவர் உனவடுன பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

காலி பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளிலுள்ள பிள்ளைகளின் பெற்றோர்கள், தமது பிள்ளைகள் சிலரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்தப்படுவதாகவும், அந்த குழந்தைகளிடமிருந்து உண்மைகள் வெளிவருவதாகவும் தெரிவித்திருந்தனர்.

அங்கு கண்டுபிடிக்கப்பட்ட தகவல்களின்படி, குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு சம்பந்தப்பட்ட சந்தேக நபர் வாட்ஸ்அப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீவின் பல்வேறு பகுதிகளில் சிறுவர்கள் மோசடியான முறையில் இந்த துஷ்பிரயோகச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பல்வேறு இடங்கள் அதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் பிள்ளைகளுக்கு நிறைய பணம், உணவு மற்றும் உடைகளை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்யும் காணொளிகளையும் பதிவு செய்து சர்வதேச ரீதியில் விற்பனை செய்து பெருமளவு பணம் சம்பாதித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த போதகர் தனது நண்பர்களை இந்த குழந்தைகளை துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் பிரபல ஆலயம் ஒன்றை நடத்துபவர் போல் நடித்து சமூகத்தில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக உண்மைகள் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மிகவும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வரும் குறித்த போதகர் தனது பாதுகாப்பிற்காக தனிப்படை காவலர்களை பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் நேற்று காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 8 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன லுனுகல மாவட்டத்தில் வசிக்கும் 14 வயது மைனர் சிறுமி, லுனுகல உடகிருவ காப்புக்காட்டில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியை கடத்தி தடுத்து வைத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சிறுமியின் காதலன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 3ஆம் திகதி சிறுமியை காணவில்லை என லுணுகல பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்ததையடுத்து, குறித்த சிறுமியை தேடும் நடவடிக்கையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் காப்புக்காட்டில் மேற்கொண்டிருந்தனர்.

சிறுமியின் காதலன் என சந்தேகிக்கப்படும் இளைஞனின் வேண்டுகோளின் பேரில் 53 வயதுடைய மற்றைய சந்தேக நபர் கடந்த 3ஆம் திகதி சிறுமியை அவரது வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் சிறுமியின் தந்தையின் விவசாய நடவடிக்கைகளுக்கு உதவியதாக தெரியவந்துள்ளது.

எனினும், சந்தேகநபர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றாரா அல்லது அவரது விருப்பத்தின் பேரில் அழைத்துச் சென்றாரா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைகளுக்காக பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply