மட்டக்களப்பு – மயிலத்தமடுஇ மாதவனை பகுதியில் மீண்டும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் அத்துமீறிய குடியேற்றங்களை செய்ய முனைந்துள்ளனர்
அப்பகுதி பண்ணையாளர்கள் இதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில்இ
சனிக்கிழமை தொடக்கம் பெருமளவானஇ வேறு மாவட்டங்களை சேர்ந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் வருகை தந்தனர்.
அப்பகுதியில் உள்ள காடுகளை துப்புரவு செய்வதுடன்இ கொட்டில்களை அமைத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதிஇ பண்ணையாளர்களின் கால்நடை வளர்ப்பு பகுதியாகவுள்ள நிலையில் தொடர்ச்சியாக அத்துமீறிய பயிர்ச்செய்கைகள் மேற்கொள்வதற்கு வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் முயற்சி செய்கின்றனர்.
இந்த நிலையில் அது தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுஇ அப்பகுதியில் எந்தவித அத்துமீறல்களும் முன்னெடுக்கப்படாது என உறுதியளிக்கப்பட்ட நிலையிலும் மீண்டும் அத்துமீறல்கள் முன்னெடுக்கப்படுவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.






