கொரோனா தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட நகரங்களுக்கு இடையிலான விரைவு ரயில்கள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
இதனை இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படிஇ இரவு தபால் ரயில்கள் உட்பட 301 ரயில் பயணங்கள் இன்று திங்கட்கிழமை முதல் சேவையில் சேர்க்கப்படவுள்ளன.
அத்துடன்இ இன்று முதல் அனைத்து அலுவலக ரயில்களும் இயக்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்இ
மேலும்இ மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்துஇ நீண்ட தூர ரயில்களை இயக்கியது.
கடந்த சில நாட்களாக ரயில்களைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றது.
எனினும்இ கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் அதிக ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்கு ரயில்களை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளைஇ எப்பொழுதும் ரயில்களை பயன்படுத்தும் போது பயணிகள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.






