சுகாதாரத்துறை துறையினர் அனைவருக்கும் சீரான எரிபொருள் விநியோகம்- நன்றி தெரிவித்த வைத்திய அதிகாரிகள் சங்கம்!

நாட்டினுடைய பொருளாதார சிக்கல் காரணமாக அனைவரையும் போலவே சுகாதார துறையினருக்கும் எரிபொருளை பெற்றுக் கொள்வதில் பாரிய சவால்கள் இருந்தன என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் சுகாதாரத் துறை செயலிழக்கும் ஒரு பாரதூரமான நிலைமை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலைமையில் சுகாதாரத்துறையினர் அனைவருக்கும் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் ஒரு பொறிமுறையை நாடு முழுவதிலும் ஏற்படுத்துவதில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முழு மூச்சுடன் ஈடுபட்டது.

சுகாதார அமைச்சு, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியன தமது சிறந்த ஒருங்கிணைப்புடன் எரிபொருள் விநியோகத்தை சீராக்க கடும் முயற்சிகள் எடுத்து இருந்தன.

எரிபொருள் விநியோகத்தை சீராக்குவதில் யாழ் போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கடும் ஒத்துழைப்பு வழங்கி இருந்தது.

யாழ் மாவட்டத்தைப் பொறு த்தவரை சுகாதார ஊழியர்களின் எரிபொருள் விநியோகத்தை சீராக்குவதில் யாழ் அரச அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், யாழ் பிரதேச செயலர் மற்றும் ஏனைய பிரதேச செயலர்கள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய முகாமையாளர்,வைத்திய சேவை நிர்வாகிகள் ஆகியோருடன் எரிபொருள் விநியோக நிலைய உரிமையாளர்கள், முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் மகத்தான ஒத்துழைப்பும் முயற்சியும் சுகாதார சேவையின் தொடர்ச்சிக்கு பெரும் பங்காற்றியது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய முகாமையாளர் மற்றும் யாழ் பிரதேச செயலரின் சலிப்புத் தன்மையற்ற,பரந்த மனதினை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பாராட்டி நிற்கின்றது.

மேற்குறித்த அனைத்து அரசு அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து சுகாதார சேவைக்கான எரிபொருள்விநியோகத்திற்கான ஒழுங்குகளை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எடுத்திருந்தது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பங்களித்த பாதுகாப்பு படையினர்,பொலிஸார் ஆகியோரின் பணிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஊடகத்துறை மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு சுகாதாரத் துறைக்கு உறுதுணையாக இருந்தது.

பிற செய்திகள்

Leave a Reply