டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட் – ரஷித் கான் சாதனை

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-12 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன்மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலை அவுட்டாக்கினார். இது சர்வதேசம், உள்ளூர், லீக் உள்பட ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் ரஷித் கானின் 400-வது விக்கெட்டாக (289 ஆட்டம்) அமைந்தது.

இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய பவுலர், மொத்தத்தில் 4-வது வீரர் என்ற சிறப்பை 23 வயதான ரஷித் கான் பெற்றார்.

டி20 போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் முதல் 3 இடங்களில் வெஸ்ட் இண்டீசின் வெயின் பிராவோ (553 விக்கெட்), சுனில் நரைன் (425 விக்கெட்), தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் (420 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply