குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் விளையாடும் 12 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன், ஒரு முறை மோத வேண்டும். 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

இதில் குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன.

இந்நிலையில், குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான் அணி தான் விளையாடிய 5 போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதனால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

நியூசிலாந்து அணி தான் விளையாடிய 5 போட்டிகளில் தலா 4 வெற்றியைப் பெற்று 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் அந்த அணியும் அரையிறுதி வாய்ப்பை பெற்றுள்ளது.

ஏற்கனவே, இந்தியா, ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன.

அபுதாபியில் 10ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

துபாயில் 11ம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply