அனைத்துக் கட்சி ஆட்சியமைப்பினால் மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாது-காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அதிருப்தி!

அனைத்துக் கட்சி ஆட்சியமைப்பினால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாது என காலிமுகத்திடல் போராட்ட செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போராட்டத்தின் முக்கிய பிரேரணையான மக்கள் பேரவை மக்களுக்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் கொண்ட கட்டமைப்பாக கட்டியெழுப்பப்பட வேண்டுமென போராட்டத்தின் செயற்பாட்டாளர் லஹிரு வீரசேகர கூறுகிறார்.

அதன்படி, போராட்டத்தின் ஒரு படியாக மக்கள் பேரவையின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் வலியுறுத்துகின்றார்.

பிற செய்திகள்

Leave a Reply