உதிரிபாகங்கள் தட்டுப்பாடு; 20 ரயில்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

என்ஜின் ஒயில் மற்றும் உதிரிபாகங்கள் தட்டுப்பாடு காரணமாக 20 ரயில்கள் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் வழக்கமான நேர அட்டவணையின்படி இயங்கும் ரயில்கள் அதிக எண்ணிக்கையான பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டியுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார் .

இன்ஜின் ஒயிலை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply